Categories
தேசிய செய்திகள்

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கணுமா?…. வெறும் 5,000 ரூபாய் மட்டும் போதும்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!!

இந்தியாவில் தற்போது பெட்ரோல்-டீசல் விலையேற்றம் என்பது பெரும் சிக்கலாக இருந்து வருகிறது. வாங்கும் சம்பள பணத்தில் பெரிய தொகையைப் பெட்ரோலுக்காகவே செலவிட வேண்டி இருக்கிறது. இதன் காரணமாக பெரும்பாலானோர் பேருந்துகளிலும், ரயில்களிலும் பயணிக்கத் தொடங்கிவிட்டனர். அதேபோன்று புதிதாக வாகனங்கள் வாங்க நினைப்பவர்களின் பார்வை எலெக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் திரும்பி இருக்கிறது. இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகன விற்பனையானது அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்றவாறு பல்வேறு அம்சங்களுடன் புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ஈஎம்ஐ ஆகிய பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் பெரும் ஆர்வத்துடன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கிச் செல்கின்றனர். ஆகவே நீங்களும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவதற்கு திட்டமிட்டு இருந்தால் உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு காத்திருக்கிறது. அதாவது, ஆம்பியர் மேக்னஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நீங்கள் குறைவாக பணம் செலுத்தி பெற்று கொள்ளலாம். இந்த ஸ்கூட்டரின் சந்தை விலை 49,999 ரூ ஆகும். ஆனால் நீங்கள் 5000 ரூபாய் செலுத்தினாலே போதுமானது. அடுத்து இந்த ஸ்கூட்டர் உங்களுக்குச் சொந்தமானது ஆகும். இது வெறும் முன்பணம் மட்டுமே என்பதால் அடுத்து ஒவ்வொரு மாதமும் நீங்கள் ரூ.1,614 ஈஎம்ஐ செலுத்த வேண்டும். அதன்படி மொத்தம் 36 மாதங்களுக்கு செலுத்த வேண்டி இருக்கும்.

வாகனத்தின் விலை- ரூ.49,999

கடன் தொகை – ரூ.44,999

செலுத்த வேண்டிய மொத்த தொகை – ரூ.58,104

முன் பணம் – ரூ.5000

ஈஎம்ஐ – ரூ.1,614

வாகனத்தின் டீலரிடம் பேசி முன் பணம், ஈஎம்ஐ, செலுத்த வேண்டிய மாதங்கள் ஆகியவற்றை உங்களுக்கு வசதியான வகையில் மாற்றிக் கொள்ளலாம்.

Categories

Tech |