கரூர் மாவட்டம், ராயனூர் என்ற பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 11 வயதில் சஞ்சய் என்ற மகன் உள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மகனுக்கு பிறந்தது முதலே எலும்பு சிதைவு என்ற வினோதமான நோய் உள்ளது. எலும்புச் சிதைவு காரணத்தினால் இவருக்கு சுமார் 57 முறை கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு பல லட்சங்கள் வரை செலவு செய்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூன்று மாதத்திற்கு ஒருமுறை சிஎம்சி மருத்துவமனையில் 30 ஆயிரம் ரூபாய் செலவில் ஊசி ஒன்று செலுத்த வேண்டியுள்ளது. இது அவர் வாழ்நாள் முழுவதும் செலுத்த வேண்டியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் தவிக்கும் சிவகுமார் போதிய வருமானம் இல்லாததால் மகனுக்கு எந்தவித சிகிச்சையும் அளிக்காமல் உள்ளார். நடக்கமுடியாமல் தனது மகனின் அன்றாட இயற்கை உபாதைகளை கூட தாய் தந்தையர்களை கவனித்துக்கொள்ளும் சூழ்நிலையில் இருக்கின்றார். மேலும் நடுத்தர குடும்பம் என்பதால் செலவுகளை சமாளிக்க முடியாமல் கண்ணீர்விட்டு கதறினார். இந்நிலையில் இந்த நிலையை கடந்து வருவதற்கு தமிழக முதல்வர் தங்கள் மகனின் மருத்துவ சிகிச்சைக்கு உதவ வேண்டுமென்று சிவகுமார் கோரிக்கை விடுத்துள்ளனர்.