தேங்காய் பாலில் உள்ள நன்மைகள் குறித்து நாம் இதில் தெரிந்து கொள்வோம்.
தேங்காயை நாம் பச்சையாக சாப்பிடும் போது அது நம் உடலுக்கு மிகவும் நல்லது. அதையே நாம் குழம்பில் சேர்த்து சாப்பிடும் போதுதான் அது கொழுப்பு நிறைந்த பொருளாக மாறுகிறது. போதுமான அளவு கால்சியம் இல்லாத போதிலும், பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. நமது உடம்பில் எலும்புகளை உறுதியாக்க இந்த பாஸ்பரஸ் மிகவும் முக்கியமான ஒன்று. பாஸ்பரஸை கால்சியத்துடன் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
எலும்பை பலப்படுத்த, சரும நோய்களுக்கு தீர்வு காண தேங்காய் பால் மிகவும் நல்லது. தேங்காய் பால் வெகு விரைவிலேயே பசியை அடங்கச் செய்யும். தேங்காய் பாலில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் உள்ளதால் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை சாப்பிடலாம். தேங்காய் பாலை கீல்வாதம் இருப்பவர்கள் சாப்பிட்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
இரத்த கொதிப்பை எண்ணி கவலைப்படுபவர்கள் தேங்காய் பாலை எடுத்துக் கொண்டால் இரத்த கொதிப்பின் அளவை குறைக்க உதவும். தேங்காய் பால் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சளி இருமலை விரட்டியடிக்க இது உதவி செய்யும். இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. புற்றுநோய் அணுக்களின் செயல்பாடுகளை குறைக்கும்.