இங்கிலாந்தின் அறிவியல் ஆய்வாளர்கள் எலிகளுக்குள் கொரோனா தொற்று எளிதாக பரவும் என்று அறிக்கை விடுத்துள்ளனர்.
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலக நாடுகள் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கி வருகின்றது. இந்த நிலையில் கொரோனா மனிதர்களின் மூலம் எலிகளுக்கு பரவ வாய்ப்பிருப்பதாக இங்கிலாந்து நாட்டினுடைய கிராமத்து துறை உணவு மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் அறிக்கை விடுத்துள்ளனர். மேலும் தென்னாப்பிரிக்க மற்றும் கென்ட் வகை வைரஸ்கள் எலிகளுக்கு எளிதாக பரவக்கூடியது என்றும் கூறியுள்ளனர்.
மேலும் அவர்கள் ஒரு எலியிடமிருந்து கொரோனா மற்ற எலிகளுக்கும் எளிதாக பரவும் என்றனர். இதற்கிடையே மனிதர்களுக்கு எலியின் மூலம் தொற்று பரவுமா என்பது கேள்விக்குறியே. ஆனால் எலிகளுள்ள இடமான கழிவுநீர் கால்வாய் போன்ற இடங்களில் பணிபுரியும் மனிதர்களுக்கு எலிகளின் மூலம் தொற்று பரவ வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளனர். இது உலகளவில் உள்ள மக்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.