ஒரே நாளில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரான எலான் மஸ்க் 25.1 பில்லியன் டாலர் லாபம் ஈட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் 10 மிகப்பெரிய தொழில்நுட்ப துறையை சேர்ந்தவர்கள் ஒரே நாளில் 54 பில்லியன் டாலர்களை சேர்த்துள்ளனர். அதில் எலான் மஸ்க் பாதியை ஒரே நபராக பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த அதிகரிப்புக்கு கடந்த செவ்வாய்க்கிழமை அன்று டெஸ்லா நிறுவனத்தின் மதிப்பு 20 % ஆக உயர்ந்தது தான் காரணம் .இந்த 20% என்பது ஒரு வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய வருமானம் என்று கூறப்படுகிறது .
இதனால் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 174 பில்லியன் ஆக உயர்ந்த நிலையில் கிட்டத்தட்ட அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸ்சின் சொத்து மதிப்பை நெருங்கியுள்ளது. இருப்பினும் உலகின் முதல் பணக்காரரான அமேசான் நிறுவனரின் சொத்து மதிப்பு 179.9 பில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.