Categories
தேசிய செய்திகள்

“எலான் மஸ்க்கை எதிா்தரப்பாக இணைக்கக் கோரிய விண்ணப்பம்”…. தில்லி உயர்நிதிமன்றம் நிராகரிப்பு…..!!!!!

டிம்பிள் கௌல் என்ற டுவிட்டா் பயனாளா் தன் பக்கத்தில் வரலாறு, இலக்கியம், அரசியல், தொல்லியல் உள்ளிட்ட கல்விசாா்ந்த தகவல்களைப் பதிவிட்டு வந்தாா். இதையடுத்து டுவிட்டரின் விதிகளை மீறியதாகக் கூறி டிம்பிள் கௌலின் கணக்கு முடக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிம்பிள் கௌல் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தாா். இவ்விவகாரத்தில் டுவிட்டா் நிறுவனம் தன்னிச்சையாக செயல்பட்டு இருப்பதாக தன் மனுவில் அவா் குற்றம்சாட்டினாா். கணக்கை முடக்குவதற்கு முன் தன் தரப்பு வாதத்தைக் கேட்க டுவிட்டா் நிறுவனம் கால அவகாசம் வழங்கவில்லை எனவும் அவா் குறிப்பிட்டிருந்தார்.

இதன் வாயிலாக தனது கருத்து தெரிவிக்கும் உரிமையை டுவிட்டா் நிறுவனம் பறித்துள்ளதாக மனுவில் அவா் குறிப்பிட்டிருந்தாா். இம்மனு நீதிபதி யஷ்வந்த் வா்மா தலைமையிலான அமா்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையின் போது டுவிட்டா் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தாங்கள் தனியாா் நிறுவனம் என்பதால் தங்களுக்கு எதிராக ரிட்மனு தாக்கல் செய்ய முடியாது என வாதிட்டாா். ஆகவே இம்மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் டுவிட்டா் தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது டுவிட்டரின் புது உரிமையாளரான எலான் மஸ்க், கருத்து சுதந்திரம் பற்றி வேறுபட்ட கண்ணோட்டம் கொண்டவராக இருப்பதால், அவரை இந்த வழக்கின் ஒருதரப்பாக இணைக்கவேண்டும் என்று மனுதாரா் தரப்பு வழக்கறிஞர் ராகவ் அஸ்வதி சாா்பில் விண்ணப்பம் தாக்கல்செய்யப்பட்டது. அதன்பின் நீதிபதிகள் கூறியதாவது, “தவறான நோக்கில் இந்த விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இவ்வழக்கில் டுவிட்டா் நிறுவனம் தன் வழக்கறிஞரை உரியமுறையில் நியமித்துள்ளது. இத்தகைய நிலையில் இது போன்ற விண்ணப்பத்தைத் தாக்கல் செய்யவேண்டிய அவசியமில்லை. ரூபாய்.25,000 அபராதத்துடன் இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது” என்று கூறினர்.

Categories

Tech |