மாருதி சுஸூகி இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். கடந்த நிதியாண்டில் மட்டும் 2 லட்சத்துக்கு மேற்பட்ட கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. இது மாருதி சுஸூகி வரலாற்றில் ஒரு மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட அதிகபட்ச கார்களின் எண்ணிக்கையாகும். இதுவரை இந்நிறுவனம் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்களை ஏற்றுமதி செய்துள்ளது.
இந்நிலையில் மாருதி சுசுகி நிறுவனம் 2025ஆம் ஆண்டில் எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்ட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய மாருதி சுசுகியின் நிர்வாக இயக்குனர் ஹிஷாஷி, தற்போதைய டெக்னாலஜி விலையில் 10 லட்சத்துக்குள் எலக்ட்ரிக் கார்களை கொண்டு வருவது சாத்தியமில்லை. தற்போது ஒரு காரின் மொத்த விலையில் 40% அளவுக்கு பேட்டரிக்கு செலவாகிறது. பேட்டரியின் அளவை குறைத்தால் விலை குறைந்த விலை கார் வாங்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.