Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எர்ணாகுளம் வேளாங்கண்ணி சிறப்பு எக்ஸ்பிரஸ் வாராந்திர ரயில்…. “பேராவூரணியில் நின்று செல்வதால் வரவேற்பு தெரிவித்த பயணிகள்”….!!!!!

எர்ணாகுளம் வேளாங்கண்ணி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் பேராவூரணி ரயில் நிலையத்தில் நின்று செல்வதால் பயணிகள் வரவேற்பு அளித்துள்ளனர்.

எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் அடுத்த மாதம் ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை இயக்கப்பட இருக்கிறது. இந்த சிறப்பு எக்ஸ்பிரஸ்  ரயிலானது சில நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் பேராவூரணி ரயில் நிலையத்தில் இந்த சிறப்பு ரயில் நிற்காமல் போவதால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால் பயணிகள் பேராவூரணியில் நின்று செல்ல வலியுறுத்தி வந்த நிலையில் அவர்களின் கோரிக்கையை ஏற்று பேராவூரணி நிலையத்தில் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சென்ற ஜூன் 11ஆம் தேதி முதல் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவிப்பை வெளியிட்டது.

அதன்படி ரயில் நின்று செல்வதால் பயணிகள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால் பல்வேறு அமைப்பினர் சார்பாக ரயில் என்ஜின் டிரைவர்களுக்கு சால்வை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

Categories

Tech |