Categories
தேசிய செய்திகள்

எருமை கன்றின் உரிமையாளர் யார்…? டிஎன்ஏ பரிசோதனை…!!!!!!

எருமை கன்றின் உரிமையாளர் யார் என்பதை கண்டுபிடிப்பதற்கு டிஎன்ஏ பரிசோதனை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் அகமதுகர்  எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சந்திரபால் காஷ்யாப் என்பவர்  வசித்து வருகிறார். இவரது எருமைகளில் ஒன்று ஈன்ற கன்றுகுட்டி கடந்த 2020 ஆம் வருடம் ஆகஸ்ட் 25ஆம் தேதி காணாமல் போனது. இதனையடுத்து பல இடங்களில் தனது எருமை கன்றை  தேடி அலைந்த அவர் அருகில் இருக்கும் சஹரன்பூரின் பீன்பூர் கிராமத்தின் சத்வீர்  என்பவரிடம் ஒரு எருமை கன்று  இருப்பதை அறிந்து இருக்கின்றார்.

அது தனது எருமை கன்றுதான் எனவும் அதைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் சந்திரபால் கேட்டபோது எருமைக் கன்றை தர மறுப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி சந்திரபால்  கிராம பஞ்சாயத்து அந்த பகுதி காவல் நிலையம் போன்றவற்றில் புகார் செய்துள்ளார். ஆனால் அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஷாம்லி மாவட்ட எஸ்பி சுக்ரிதி மகாதேவன் புகார் செய்துள்ளார். மேலும் தான் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அனுப்பிய புகாரின் நகல் அளித்திருக்கின்றார்.

இதனையடுத்து எஸ்பி சுக்ரிதி, டிஎன்ஏ சோதனை செய்து உண்மையைக் கண்டறியுமாறு ஷாம்லி மாவட்ட அரசு கால்நடை மருத்துவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறார். இதன்படி பீன்பூர் வந்த கால்நடை மருத்துவர்கள் டிஎன்ஏ சோதனை சாம்பிளை எருமை கன்றிடம்  எடுத்து சென்றிருக்கின்றனர். இதை சந்திரபால் இடம் உள்ள தாய் எருமையின்  டிஎன்ஏ உடன் பொருத்திப் பார்த்து உண்மை அறியப்படுகின்றது.

Categories

Tech |