வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் நடைபெற்ற எருது விழாவில் பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டு களித்தனர்.
பொங்கல் திருநாளை ஒட்டி அணைக்கட்டு பேருந்து நிலையம் அருகில் எருது விடும் விழா பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. இவ் விழாவை காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் திரண்டனர். வீரர்கள் உறுதி ஏற்ற பின்னர் வாடிவாசல் வழியாக காளைகள் சீறிப் பாய்ந்தன. எருது விழாவையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.