இன்டர்நெட் வசதி இல்லாத தீவிற்கு எலன் மஸ்க் மீண்டும் இன்டர்நெட் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு டோங்கோ. சுமார் 1.5 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்நாட்டில் உள்ள ஒரு தீவில் ஹுங்கா டோங்கோ எனும் எரிமலை கடலுக்கடியில் இருக்கிறது. இந்த எரிமலை கடந்த ஜனவரி 15ம் தேதியன்று திடீரென வெடித்து சிதறியது. இதனால் கடலில் சுனாமி அலை
சுமார் 15 மீட்டர் உயரத்துக்கு தோன்றியது.
இதில் எரிமலைக்கு மிக அருகில் இருந்த தீவுகளான மங்கோ தீவு, ப்னொய்புவா,நமுகா தீவு , ஆகியவை மிகப் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. சுனாமி தாக்கியதன் காரணமாக பல்வேறு தீவுகள் வெளியுலக தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும் உலகின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ஒரே பைபர் ஆப்டிக் கேபிளை சுனாமி துண்டித்துள்ளதால் , அங்குள்ள மக்கள் இன்டர்நெட் வசதி இல்லாமல் சிரமத்தில் இருக்கின்றார்கள்.
இந்நிலையில் உலகின் பிரபல பணக்காரர் மற்றும் அமெரிக்காவின் தொழிலதிபருமான எலான் மஸ்க் இன்டர்நெட் இன்றி தவிக்கும் தீவிற்கு மீண்டும் இன்டர்நெட் வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் தனது நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்லிங் இன் செயற்கைக்கோளை பயன்படுத்தி இன்டெர் நெட்டை மீட்டெடுக்க முயற்சி செய்து வருகிறார்.
டோங்கோவின் அண்டை நாடான பிஜியின் உயர் அதிகாரிகளில் ஒருவர் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் குழுவினர், பிஜியில் செயற்கைகோள் மூலம் மீண்டும் இணைக்க உதவும் நிலையத்தை நிறுவுவதாக கூறி உள்ளார். மேலும் டோங்கோ தீவு வாசிகளுக்கு மீண்டும் இன்டர்நெட் அமைப்பை எலன் மஸ்க் ஏற்படுத்திக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.