Categories
உலக செய்திகள்

“எரிபொருள் தட்டுப்பாடு” காத்திருப்பதை விட சைக்கிளை செல்வதே சிறந்தது…. மக்கள் அதிரடி முடிவு…!!!

பிரபல நாட்டில் மக்கள் சைக்கிள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு போன்ற பல்வேறு பிரச்சனைகள் எழுந்துள்ளது. இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பெட்ரோல் மற்றும் டீசலை வாங்குவதற்கு நாள் கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அவசர மருத்துவ சேவை வாகனங்களும்  நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக மக்கள் சைக்கிள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் எரிபொருள் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதை விட சைக்கிளில் செல்வதே மேல் என மக்கள் நினைக்கின்றனர்.

Categories

Tech |