Categories
தேசிய செய்திகள்

எரிந்த காருக்குள் இருந்து மீட்கப்பட்ட சடலம்…. பின்னணி என்ன?… பரபரப்பு சம்பவம்….!!!!

வட மேற்கு தில்லியின் கஞ்சவாலா பகுதியில் எரிந்த காருக்குள் கருகிய நிலையில் இருந்த சடலம் ஒன்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

காவல் துறை துணை ஆணையர் (ரோகிணி) பிரணவ் தயல் கூறியதாவது, மீட்கப்பட்ட சடலம் முற்றிலும் கருகிய நிலையில் இருந்ததால் அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. கஞ்சவாலாவில் கார் எரிவது குறித்து இன்று காலை 6.40 மணியளவில் அழைப்பு வந்தது. இதையடுத்து அந்த இடத்தை அடைந்தபோது, மஜ்ரா தபாஸில் இருந்து உயர்நீதிமன்றம் போகும் வழியில் கார் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் உடலும், காரும் முற்றிலுமாக எரிந்து இருப்பதாக அவர் தெரிவித்தார். மாவட்டக் குற்றப் பிரிவுகுழு மற்றும் தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தை ஆய்வு மேற்கொண்டனர். சம்பவத்தின் பின்னணியை அறிவதற்கு, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் இறந்தவரை அடையாளம் காணும் முயற்சியும் நடந்து வருகிறது என்று கூறினார்.

Categories

Tech |