Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எரித்து கொலை செய்யப்பட்டாரா…? கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

கர்ப்பிணி பெண் இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள நாருகாபுரத்தில் தீக்காயங்களுடன் முருகன் லட்சுமி என்ற பெண் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து முருகலட்சுமியின் தாயார் தனது உறவினர்களுடன் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு முருக லட்சுமியை ஜான்பாண்டியன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தோம். அதன்பிறகு முருகலட்சுமி கர்ப்பமானார். கடந்த 8-ஆம் தேதி முருகலட்சுமி இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து விசாரிக்க ஜான்பாண்டியனை தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை எடுக்கவில்லை. இதனால் ஊர் மக்களுடன் நாங்கள் நாருகாபுரத்திற்கு சென்றோம். அங்கு மின்சாரம் தாக்கி முருகலட்சுமி இறந்ததாக சிலர் கூறினார். ஆனால் மழை காரணமாக மதியம் 2 மணி முதல் மாலை 6.30 மணி வரை அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வேறு சிலரிடம் கேட்ட போது எனது மகள் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர். நாங்கள் திருமணத்தின் போது முருகலட்சுமிக்கு 10 பவுன் தங்க நகையும், ஜான் பாண்டியனுக்கு 2 பவுன் தங்க நகையும் போடுவதாக தெரிவித்தோம்.

ஆனால் முருகலட்சுமிக்கு 7 பவுன் தங்க நகையும், ஜான்பாண்டியனுக்கு 2 தங்க நகை மட்டுமே போட்டோம். எனவே மீதமுள்ள நகையை வாங்கி வருமாறு அவர்கள் முருகலட்சுமியை அடித்து துன்புறுத்தி எரித்து கொலை செய்ததாகவும், அதன் பிறகு அவர்கள் எனது மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் மின்சாரம் தாக்கி இறந்ததாகவும் நாடகம் ஆடுகின்றனர். எனவே ஜான்பாண்டியனின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Categories

Tech |