தருமபுரி மாவட்டம் பொன்னகரம் பேரூராட்சியில் ஏர்ரகொல்லனுர் முதல் எட்டியாம்பட்டி வரை நபார்டு நிதிஉதவியுடன் ரூ.69 லட்சத்தில் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு செயல் அலுவலர் கீதா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வள்ளியம்மாள் பவுண்டேசன் முன்னிலை வகித்தார். அதனை தொடர்ந்து பேரூராட்சி தலைவர் வீரமணி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் நிரோஷா முரளி, சுமித்ரா, சந்தோஷ், சுமதி வெங்கடேஷ், ஜெயக்கொடி, பச்சையப்பன், மோசின் கான், பவுன்ராஜ், ரேவதி லட்சுமிமணன், ஜெயந்தி குணாளன், ஷானு, கமலேசன், பூவரசன் மற்றும் திமுக மாவட்ட பிரதிநிதி சிவகுமார், ஒப்பந்தகாரர் ஜெமினி, பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.