கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மதுரை மாவட்டத்தில் உள்ள கோ.புதுப்பட்டி பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க திட்டமிடப்பட்டுஅடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் முதற்கட்ட பணியாக 199.24 ஏக்கர் பரப்பளவை சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. ஆனால் இதுவரை மருத்துவமனை கட்டும் பணி தொடங்கப்படவில்லை. இதனையடுத்து சுற்றுச்சுவர் நுழைவு வாயிலில் ஒரு தபால் பெட்டி வைத்து, அதில் ஆனையூர், மதுரை என முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவமனை கட்டும் பணி தொடங்கப்படாத நிலையில் தபால் பெட்டியா? என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Categories
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் இடத்தில் “தபால் பெட்டி” பரபரப்பு சம்பவம்….!!!
