மக்கள் நீதி மய்யம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் சார்பில் நேற்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் நமது இந்திய நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி கடந்து 2019 -ஆம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அடி கல்லை நாட்டினார். ஆனால் பணி தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்நிலையில் சுற்றுச்சூழல் தவிர வேறு எந்த ஒரு கட்டுமான பணியும் தொடங்கப்படவில்லை. ஆனால் பூர்வாங்கத் திட்டமிடல் பணிகள் இறுதி நிலையை எட்டியுள்ளதாகவும் நிதி ஒதுக்கீடு முழுமையாக கிடைக்கப்பெறவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன் உண்மை நிலையை தமிழக மக்களுக்கு விளக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. மேலும் எவ்வளவு பணிகள் நடைபெற்று உள்ளது, எந்தெந்த பணிகள் நிலுவையில் உள்ளது என்பது குறித்த தகவலை விரைவில் மத்திய அரசு வெளியிட வேண்டும். இதனையடுத்து பாஜகவின் சாதனை என்று கூறப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை புனைவுகள் தான் உலவிவருகிறது. எனவே இந்த மருத்துவமனையின் உண்மை நிலையை வெளிப்படையாக கூறி அதற்கு நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும். மேலும் கட்டுமான பணியை விரைந்து முடித்து மருத்துவமனையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.