பெங்களூரைச் சேர்ந்த இளம்பெண் தனது கணவரான இன்ஜினியர் மீது ஒரு பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கடந்த 2018 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12-ஆம் தேதி எனக்கும் இன்ஜினியருக்கும் திருமணம் நடந்தது. அதன் பின்னர் நானும் எனது கணவரும் தேனிலவுக்கு சென்றோம். தேன் நிலவுக்குச் சென்ற இடத்தில் வயிற்று வலி உள்ளிட்ட பல காரணங்களைக் கூறி அவர் தாம்பத்தியம் வைக்க மறுத்துவிட்டார்.
நாங்கள் தேனிலவுக்கு சென்று வந்த பிறகு, கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி கேட்டு எனது கணவர் எனக்கு தொல்லை கொடுத்து வந்தார். இந்நிலையில் எனது கணவர் வேலை விஷியமாக வெளியூர் சென்றபோது, அவர் சம்பந்தமான ஒரு மருத்துவ அறிக்கை எனக்குக் கிடைத்தது. அந்த அறிக்கை மூலம் எனது கணவருக்கு எய்ட்ஸ் இருப்பது தெரிய வந்தது. அவருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது தெரிந்தும் அவருடன் தொடர்ந்து வாழ்ந்து வந்தேன்.
அவருடன் தொடர்பில் இருந்ததால் நானும் தற்போது எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். எய்ட்ஸ் நோய் இருப்பதை மறைத்து திருமணம் செய்தது மட்டுமல்லாமல் தற்போது வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தி வரும் எனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் என்ஜினீயர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.