மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்கள் அனைவரும் இனி இருப்பிடச் சான்றிதழ் சமர்ப்பித்தால் மட்டுமே இடம் கிடைக்கும்.
புதுவை ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையில் 64 இடங்கள் புதுவை மாநில மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.அந்த இடங்களில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த 31 மாணவர்கள் இடம்பெற்றுள்ளதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தரவரிசை பட்டியல் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பது, “ஜிப்மரில் உள் ஒதுக்கீட்டு இடங்கள் புதுச்சேரியை இருப்பிடமாகக் கொண்ட மாணவர்களுக்கு கிடைக்கிறது என்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது. அதனால் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் புதுச்சேரி காண இருப்பிடம் உறுதியான பின்னரே ஜிப்மரில் இடம் ஒதுக்கீடு செய்யப்படும்.எனவே புதுவை மாநில மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பெற விரும்பும் மாணவர்கள் வருகின்ற 18ம் தேதிக்குள் தங்களுடைய குடியிருப்பு சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் சான்றிதழ் சமர்ப்பித்த மாணவர்களுக்கு மட்டும் ஜிப்மர் ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை நடக்கும். மெடிக்கல் கவுன்ஸிங் கமிட்டிதான் ஜிப்மர் கவுன்சிலிங் நடத்தி இடங்களை ஒதுக்குகிறது. எனவே சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தால் மட்டுமே மருத்துவ சீட்டு உறுதி செய்யப்படும் என்பதை அனைத்து மாணவர்களும் அறிந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.