எம்ஜிஆர் படத்திற்குப் பிறகு தான் விரும்பிப் பார்ப்பது விஜய் படம் தான் என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பல கோடி மக்கள் இன்றளவும் எம்ஜிஆரின் ரசிகர்களாக உள்ளனர். இதில் திரைஉலக நடிகரான சத்யராஜ் எம்.ஜி.ஆரின் மிகச்சிறந்த ரசிகர்களில் ஒருவராவார். சத்யராஜ் எந்த ஒரு விழாவில் கலந்துகொண்டு பேசினாலும் புரட்சிக்கலைஞர் எம்.ஜி.ஆரை பற்றி ஒரு சில வார்த்தைகளாவது பேசாமல் இருக்க மாட்டார்.
இதைப்போலவே சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விழாவில் சத்யராஜ் பங்கேற்று பேசினார் அதில் நான் எம்.ஜி.ஆரின் மிக தீவிர ரசிகன் அவருடைய அனைத்து திரைப்படங்களையும் விட்டுவிடாமல் பார்ப்பேன். அதுபோலவே நான் ரசித்து பார்த்த திரைப்படம் தம்பி தளபதி விஜயின் திரைப்படம் தான்.நான் எப்படிஎம்.ஜி.ஆர் அவர்களின் தீவிர ரசிகனாக இருக்கின்றேனோ அதை போலவே என் மகன் சிபிராஜ் தளபதி விஜயின் தீவிர ரசிகனாக இருக்கிறான் என்று பேசியுள்ளார்.