IPL கிரிக்கெட் போட்டி மும்முரமாக நடந்து வருகிறது. லீக் போட்டியின் 2-வது ஆட்டத்தில் மும்பை-டெல்லி அணிகள் மோதி கொண்டது. இதில் முதலாவதாக பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர் முடிவில் 177 ரன்கள் அடித்து குவித்தது. இதையடுத்து களம் இறங்கிய டெல்லி அணி 106 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. இதன் காரணமாக டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் ரிஷப்பின் கேப்டன்ஷிப் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த நிலையில் ரிஷப் பண்ட் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனி போன்று செயல்படுகிறார் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, ரிஷப் பண்ட் அழுத்ததில் விளையாடக்கூடிய வீரர் அல்ல. அவர் எப்போதுமே இயல்பான விளையாட்டை விளையாடக்கூடியவர் ஆவார். கிடைக்கும் வாய்ப்புகளை அருமையாக பயன்படுத்துவார். தொடர்ச்சியாக சிறப்பாக ஆடக்கூடியது அவ்வளவு எளிதானது அல்ல. இதனால் அவருடைய சாமர்த்தியமான கேப்டன்ஷிப் தனக்கும் பிடிக்கும். குல்தீப் யாதவை சரியாக பயன்படுத்தியதுடன் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் பந்து வீச்சை மாற்றியமைத்தார்.
அதே நேரம் அவர் தெருக்களில் கிரிக்கெட் விளையாடுவது போன்று விளையாடுகிறார். ஆகவே இன்னும் அதிக விஷங்களை கற்றுக்கொள்வார். மேலும் அவரை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனியுடன் ஒப்பிடலாம் என்று கூறினார். ரிஷப்பிடம் எனக்கு பிடித்த ஒன்று டோனியை போன்றே அதிகம் சிந்தித்து செயல்படுவார். ஆட்டத்திற்கு முன்பு அவரது பயிற்சி மற்றும் பணி நெறிமுறைகள் பெரும்பாலும் டோனியை போன்று இருக்கும் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.