பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இதில் பிரியங்கா, பவானி ரெட்டி, இசைவாணி, அபிஷேக் ராஜா, இமான் அண்ணாச்சி, அக்ஷரா, சின்ன பொண்ணு, சிபி சந்திரன் உட்பட 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் வீட்டின் முதல் வார கேப்டன்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் கடந்து வந்த கடினமான பாதைகளை பற்றி எமோஷனலாக இசைவாணி பேச, மற்ற போட்டியாளர்கள் அனைவரும் கண் கலங்குகின்றனர். தற்போது இந்த புரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.