தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுகவில் தற்போது உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. எடப்பாடி மற்றும் ஓ பன்னீர்செல்வம் தனித்தனியாக பிரிந்து தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும்பாலான நிர்வாகிகளின் ஆதரவு இருப்பதால் தற்போது அவருடைய கையை அதிமுகவில் ஓங்கி இருக்கிறது. இருப்பினும் ஓபிஎஸ் அதிமுகவை தன்வசப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில் செய்தால் அவர்கள் சந்தித்து பேசிய சசிகலா அதிமுக தொண்டர்கள் எனக்கு துணை நின்றால் போதும், அதிமுகவை ஒன்றிணைக்கும் வேலையை நான் பார்த்துக்கொள்வேன் என சசிகலா கூறியுள்ளார். “எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் ஜெ.அணி, ஜா.அணி என பிரிந்து இருந்தபோதே இரு அணிகளையும் இணைணத்த என்னால், இப்ப செய்ய முடியாதா? நிச்சயமாக செய்து காட்டுவேன். எப்ப செய்யணும் எப்படி செய்யணும் என எனக்குத் தெரியும். அதை என்னிடம் விட்டு விடுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் எனக்கு துணை இருந்தால் போதும்” என்றும் கூறியுள்ளார்.