இந்த வருடம் இரண்டாவது முறையாக இன்று அதிகாலை 3.30 மணி அளவில் மேட்டூர் அணை 120 அடியை எட்டியது.சேலம் மாவட்டம் மேட்டூர் காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் மேட்டூர் அணைக்கு கூடுதலாக தண்ணீர் வருவதைத் தொடர்ந்து அணையில் இருந்து உபரி நீர் போக்கி கால்வாய் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட உள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் 60 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்படலாம். எனவே காவிரி கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.