ஜெர்மனி அரசு நாட்டில் வரும் மே மாதம் கடைசிவரை பொது முடக்கம் தளர்த்தப்படாது என்று அறிவித்திருக்கிறது.
ஜெர்மனியில் வாரத்தின் கடைசி நாட்களில் கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்திய போதும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தது. மேலும் கொரோனாவின் மூன்றாம் அலையை கட்டுப்படுத்துவதற்காக வாரக் கடைசியில் அதற்கான நடவடிக்கைகள் அவசியம் என்று சமீபத்தில் ஜனாதிபதி ஏஞ்சலா மெர்கல் தெரிவித்திருந்தார்.
மேலும் அதிக பாதிப்புகள் உள்ள பகுதிகளில் கடைபிடிக்கப்படும் கடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்துமாறு தெரிவித்திருந்தார். இந்நிலையில் நிதியமைச்சர் Olaf Scholz ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் இயல்பு நிலைக்கு எவ்வாறு திரும்ப வேண்டும் என்பதற்கான ஒரு கால அட்டவணை நமக்கு அவசியம் என்று கூறியுள்ளார். அதாவது அவர் கூறிய தகவலின் படி, மே மாதம் கடைசி வரை ஜெர்மனில் பொது முடக்கத்தில் எந்தவித தளர்வுகளும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது