உலகின் முன்னணி சமூக வலைத்தள நிறுவனமான ட்விட்டரை உலகின் மிகப்பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை அதிகாரியுமான எலான் மஸ்க் விலைக்கு வாங்கிய முயற்சி செய்து வந்தார். இதற்காக முதலில் டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீதம் பங்குகளை வாங்கினார். அதன் பிறகு ட்விட்டர் நிறுவனத்தை மொத்தமாக 4400கோடி டாலருக்கு எலான் மஸ்க் வாங்க முடிவாகி உள்ளதாக தகவல் வெளியானது. பெற்றோரை வாங்கிய பிறகு பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக தலைமை அதிகாரி முதல் பல்வேறு பதவிகளில் இருப்போரை வெளியேற்றி விட்டு புதிய அதிகாரிகளை நியமிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
மேலும் டுவிட்டரை பயன்படுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க அவர் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. அதனால் சாதாரண ட்விட்டர் பயனர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் எலான் மஸ்க் புதிய விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சாதாரண பயனர்களுக்கு ட்விட்டர் எப்போதுமே இலவசமாக தான் இருக்கும்.வர்த்தக மற்றும் அரசு பயனர்களுக்கு மட்டும் லேசான கட்டணம் வசூலிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இதனால் ட்விட்டர் பயனர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.