தமிழகத்தில் கோவிட்-19 பரவலை மேலும் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மக்கள்நலவாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மார்ச் மாதம் தொடங்கிய கொரானோ தொற்று நாளடைவில் விஸ்வரூபத்தை காட்டத்தொடங்கியது.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரானோ தொற்றின் காரணமாக தமிழக அரசின் சார்பில் பல்வேறு தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் அடுத்த கட்டமான ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வினை சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது தமிழக அரசு.எனினும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க விதிக்கப்பட்டு வரும் தடையானது தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் ஒரு பக்கம் நீண்டு வந்தாலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை.கொரோனா எப்பொழுது முடிவுக்கு வருமென்று மக்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கோவிட்-19 பரவலை மேலும் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாநில மக்கள்நலவாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடையே தெரிவித்துள்ளார்.