Categories
சினிமா

“எப்பவும் இப்படி சிரிச்ச முகத்தோட இருங்க அண்ணே”….! நிம்மதியில் தனுஷ் ரசிகர்கள்…. வைரலாகும் புகைப்படம்….!!!

நடிகர் தனுஷ் தற்போது தம் மகன் யாத்ராவுடன்  சேர்ந்து, சிரித்த முகத்துடன் எடுத்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

தமிழ் திரை உலகில் நட்சத்திர ஜோடிகள் என திகழும் தனுஷ் ,ஐஸ்வர்யா இருவரும் 18 வருடங்களாக திருமண வாழ்க்கையை நடத்தியுள்ள நிலையில், திடீரென கடந்த மாதம் 17ஆம் தேதி பிரிய போவதாக அறிவித்தனர். இந்த முடிவால் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இவர்கள் இருவரின் பிரிவுக்கான காரணம் குறித்து கோலிவுட் வட்டாரங்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.

ஆனால் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்யவில்லை என்றும் வழக்கமான குடும்ப தகராறு தான். அதனால் இருவருக்கும் அறிவுரை வழங்கியுள்ளதாக தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா தரப்பில் கூறியுள்ளார். இவர்களின் இந்த முடிவை ரஜினி சிறிதும் விரும்பவில்லை. தற்போது இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் குடும்பத்தினரும், நண்பர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தனுஷ் தனது மூத்த மகன் யாத்ரா உடன் சேர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தற்போது “நானே வருவேன்” என்ற படப்பிடிப்பில் ஊட்டியில் உள்ள தனுஷுடன் அவரது மகனும் நேரம் செலவிட்டு வருவதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து இருவரின் பிரிவிற்கு பின் தனுஷ் படப்பிடிப்பு தளத்தில் யாருடனும் சரியாக பேசுவதில்லை என்ற செய்திகள் வெளியான நிலையில், தற்போது தனது மகன் யாத்திரா உடன் சிரித்த முகத்துடன் இருக்கும் புகைப்படம் பார்த்து ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் இந்த மாதிரி “எப்பவும் சிரிச்ச முகத்தோட இருங்க அண்ணே” என்று ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.

Categories

Tech |