Categories
பல்சுவை

எப்படி தேச்சாலும் கடாயில் இருக்க கறை போகவில்லையா?…. அப்ப இத ட்ரை பண்ணுங்க….. நல்ல ரிசல்ட் கிடைக்கும்….!!!!

சமையலறையில் இருக்கும் பாத்திரங்களை எப்போதும் பளபளப்பாக வைத்திருப்பதையே பெண்கள் விரும்புவார்கள். ஆனால் சில பாத்திரங்களில் விடாப்பிடியான கறைகள் அப்படியே இருக்கும் .அதை கழுவ நேரமில்லாமல் ஊற வைத்துவிட்டு அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று செல்லும் பெண்களும் உள்ளார்கள். சில நேரங்களில் வேலை பல அதிகமாக இருக்கும் போது அடுப்பில் வைத்திருக்கும் பாத்திரம் கருகுவது கூட தெரியாது.  இதனால் வீட்டில் திட்டு வாங்கி டென்ஷன் ஆகும் பெண்களும் உள்ளார்கள். அவர்களுக்கு ஒரு தீர்வு வந்து விட்டது.

அதாவது எளிதாக பாத்திரங்களை பளபளப்பாக எப்படி மாற்றலாம் என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். அடிபிடித்த பாத்திரத்தை மதுபான வகையான ஒயின் மூலம் சுத்தம் செய்ய முடியும். இதற்கு அதிக அளவு ஒயின் தேவை இல்லை சிறிதளவு எடுத்து அதை அடிபிடித்த பாத்திரத்தில் ஊற்றி தேய்த்து ஊற வைத்து பின்னர் கழிவினால் பளபளப்பாக மாறிவிடும்.

சோப்பு தூள் மற்றும் உப்பு கலவை இந்த 2 பொருட்களை வைத்து நாம் பாத்திரத்தை தேய்த்து கழுவினால் பாத்திரத்தில் உள்ள அனைத்து கரையும் சென்றுவிடும். தக்காளிக் கெட்சப், தக்காளி அமில தன்மையுடையது என்பதால் அதை சேர்த்து இரவு முழுவதும் ஊற வைத்துவிட்டு மறுநாள் காலையில் அதை எடுத்து கழுவும் போது கருப்பு நிறம் மறைந்து பளபளப்பாக இருக்கும்.

எலுமிச்சை பழம் அடிபிடித்த பாத்திரத்தை சுத்தமாக்க பெரிதளவு பயன்படும்.  பாத்திரத்தை சாதாரணமாக கழுவி விட்டு எலுமிச்சையை பாதியாக நறுக்கி அந்த சாற்றை பாத்திரத்தில் எடுத்து கொள்ளுங்கள். பின்னர் அதில் அரை மணி நேரம் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து விடுங்கள். இதையடுத்து பாத்திரத்தை கழுவினால் பாத்திரம் பளபளப்பாக மாறிவிடும்.

வினிகர் வீடு துடைப்பது முதல் கண்ணாடி பாத்திரங்கள் வரை பளபளப்பாக மாற்றுவதில் வினிகர் முக்கிய இடத்தை பிடிக்கின்றது. கறைபிடித்த பாத்திரத்தில் படித்திருக்கும் கறைக்கு ஏற்ப வினிகரை தேவையான அளவு ஊற்றி ஸ்க்ரப் செய்து தேய்த்தால் பாத்திரம் பளபளப்பாகிவிடும்.

தயிர் பால் அடிப்பிடித்த பாத்திரத்தில் உள்ள கறைகளை நீக்க தயிர் பயன்படுத்தலாம். ஆனால் இந்த தயிர் கரைகளை மெதுவாக போக்கும். பொதுவாக டிஷ் வாஷ் லிக்யூடை பயன்படுத்தி அலுமினிய பாத்திரங்களை தேய்க்க கூடாது. வெதுவெதுப்பான நீரில் அவற்றை கழுவினால் போதுமானது. ஒருவேளை நீங்கள் சுத்தம் செய்ய விரும்பினால் சிறிதளவு உப்புத்தூவி கழுவலாம். பின்னர் பாஞ்சை வைத்து உப்பை முழுவதுமாக தொடைத்து விட்டு மீதம் உள்ள உப்பை தண்ணீர் கொண்டு கழுவி எடுக்கலாம். மேலும் அலுமினிய பாத்திரத்தை ஸ்கிரப் கொண்டு தேய்த்தால் கீறல் விழுவதற்கும் வாய்ப்பு உள்ளது .

Categories

Tech |