Categories
தேசிய செய்திகள்

”எப்படி எல்லாம் விக்கிறாங்க பாருங்க”…. 3 ஆந்திரா பெண்கள் கைது…. மெரினா கடற்கரையில் அதிர்ச்சி….!!!!!

சென்னை மெரினா கடற்கரையில் சட்ட விரோதமாக சாராயம் விற்ற 3 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி சிலைக்கும், நேதாஜி சிலைக்கும் இடைப்பட்ட பகுதியில் சாராயம் சிறு பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்டு 50 முதல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மயிலாப்பூர் காவல் துறை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் அந்த பகுதியில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அதில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 3 பெண்கள் சாராய விற்பனையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மூன்று பெண்களையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 32 லிட்டர் சாராய பாட்டில்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் அவர்கள் கூறியபோது, ஆந்திராவில் இருந்து கொள்முதல் செய்து ரயில் மூலமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து அங்கிருந்து ஷேர் ஆட்டோக்கள் மூலமாக மெரினா கடற்கரைக்கு கொண்டு வந்ததாகவும், அதன் பின் அங்கு மணல் பகுதியில் மறைத்து வைத்து சிறு பாட்டில்களில் ஊற்றி விற்பனை செய்ததாக கூறியுள்ளனர்.

மேலும் 100 லிட்டர் சாராயம் மண்ணில் புதைத்து வைத்து இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதனை தொடர்ந்து அவர்கள் அளித்த தகவலின்படி போலீசார் மெரினா கடற்கரையில் ஜேசிபி இயந்திரங்களை வைத்து குறிப்பிட்ட இடத்தில் தோண்டும்போது 2 லிட்டர் பாட்டில்களில் சாயங்களை மண்ணில் புதைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அதன் பின்னர் அதனை கைப்பற்றிய போலீசார் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் வேறு ஏதாவது இடத்தில் இதுபோல சாராய பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |