Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எப்படியெல்லாம் யோசிக்குறாங்க…. கோவிலுக்கு சென்ற பக்தர்…. கடற்கரையில் காத்திருந்த அதிர்ச்சி….

கோவிலுக்கு குடும்பத்துடன் வந்த பக்தரிடம் பணத்தை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான ராமேஸ்வரம் கோவிலுக்கு பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம். அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரைக்கு சென்றுள்ளார்.

அப்போது வெங்கடேஷ் கடற்கரையில் குடும்பத்தினரின் பைகள் மற்றும் உடமைகளுடன் நின்று கொண்டிருந்தார். இதனையடுத்து வாலிபர் ஒருவர் உங்களுடைய பணம் கீழே விழுந்துள்ளதாக வெங்கடேஷிடம் கூறியுள்ளார். இதனை கேட்ட வெங்கடேஷ் பணத்தை எடுப்பதற்காக பைகளை அங்கேயே விட்டுவிட்டு சிறிது தூரம் சென்றதாக கூறப்படுகிறது.

இதனைதொடர்ந்து அந்த வாலிபர் உடனடியாக வெங்கடேஷின் பைகளை எடுத்துகொண்டு தப்பியோடியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வெங்கடேஷ் உடனடியாக இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் மர்மநபர் எடுத்து சென்ற பையில் 20,000 ரூபாய் பணம், ஏ.டி.எம் கார்டு, ஆதார் கார்டு போன்றவை இருந்துள்ளது.

Categories

Tech |