முன்னாள் அமைச்சர் தங்கமணிசொந்தமான நாமக்கல், ஈரோடு, சென்னை உள்ளிட்ட 69 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் முறைகேடாக பெருமளவில் கிரிப்டோ கரன்சியை பணம் சேர்த்துள்ளதாக முதல் அறிக்கையில் தகவல் வெளியானது. எனவே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நாமக்கல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதில் ரூ.2.37 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்சஒழிப்புத்துறையினர் தெரிவித்தன. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி இன்று நடந்த சோதனைக்கு பதிலடியாக நாளை மறுநாள் நடக்கும் திமுக எதிரான போராட்டம் இருக்கும் என்னுடைய வீட்டிலிருந்து எதுவும் பதிவு செய்யப்படவில்லை செல்போனை மட்டுமே அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர் என்று கூறியுள்ளார்