Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“என் லட்சியமே இதுதான்” முதலிடம் பிடித்த மாணவியின் பேட்டி…!!

வேளாண் அதிகாரி ஆவதே லட்சியம் என தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த மாணவி தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி மெயின் பஜாரில் நாகராஜ்-பூவிழி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பூர்வா ஸ்ரீ என்ற மகள் உள்ளார். இவர் கோத்தகிரியில் இருக்கும் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து முடித்தார். இந்நிலையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் பூர்வா ஸ்ரீ முதலிடம் பிடித்துள்ளார்

. இதுகுறித்து மாணவி கூறும்போது, நான் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளேன். ஆனாலும் வேளாண் படிப்பில் எனக்கு ஆர்வம் அதிகமாக உள்ளது. தற்போது தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனது பெற்றோர் எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளித்தனர். நான் பி.எஸ்.சி வேளாண்மை படிக்க உள்ளேன். எதிர்காலத்தில் வேளாண் அதிகாரியாக ஆவதே எனது லட்சியம் என மாணவி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |