Categories
சினிமா தமிழ் சினிமா

‘என் ராசாவின் மனசிலே’ வெளியாகி 30 வருஷம் ஆயிடுச்சு… நடிகை மீனாவின் நெகிழ்ச்சி பதிவு…!!!

என் ராசாவின் மனசிலே படம் குறித்து நடிகை மீனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் 90களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் மீனா . இவர் தனது சிறப்பான நடிப்பால் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் . இவர் மோகன்லாலுடன் இணைந்து நடித்த திரிஷ்யம் 2 திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் திரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக் படத்திலும் ரஜினியின் அண்ணாத்த படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை மீனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் ‘என் ராசாவின் மனசிலே படம் வெளியாகி 30வருடங்கள் ஆகிவிட்டது என்பதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஏப்ரல் 13, 1991 அன்று வெளியானது. ராஜ்கிரண் சார், கஸ்தூரி ராஜா சார் மற்றும் எனது முதல் சூப்பர் ஹிட் பாடலான குயில் பாட்டு பாடலை தந்த இளையராஜா சார் ஆகியோருக்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |