Categories
தேசிய செய்திகள்

“என் மனைவி இறந்துவிடுவாள்”…. மருத்துவமனையின் முன் கதறும் கணவன்… நெஞ்சை உறைய வைக்கும் காட்சி..!!

டெல்லியில் பல மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு இடம் இல்லை என்று கூறிய காரணத்தினால் என் மனைவி இறந்து விடுவார் என்று கூறி கணவன் மருத்துவமனை முன்பு அழுத காட்சி நெஞ்சை பதற வைத்துள்ளது.

டெல்லியில் தொடர்ந்து கொரோனா அதிகரித்து வரும் சூழலில் மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் தடுப்பூசி மற்றும் படுக்கை அறை வசதிகள் என பல பிரச்சனைகள் இருந்து வருகின்றது, ஆனாலும் இன்று டெல்லியில் லோக் நாயக் ஜெய்பிரகாஷ் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் வாகனங்களின் பெரும் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் பல நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். டெல்லியில் அனைத்து மருத்துவமனை படுக்கைகளும் நிரம்பியுள்ள காரணத்தால் பலரும் வேதனை அடைந்துள்ளனர்.

இந்நிலையில் அஸ்லம் கான் என்ற நபர் தனது மனைவியை சிகிச்சை பெறுவதற்காக இரண்டு சக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு நகரில் மூன்றாவது மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கும் இடம் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளனர். இதனால் அவர் ” உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் என் மனைவி இறந்து விடுவார். தயவு செய்து அவருக்கு சிகிச்சை தாருங்கள். நான் உங்களின் கால்களில் விழ கூட தயாராக இருக்கிறேன். மீண்டும் மீண்டும் படுக்க இல்லை என்று சொல்கிறார்கள். நான் அவளை எப்படி இறக்கி விட முடியும்” என்று கூறி அழுகின்றார். இந்த காட்சி பார்ப்போரின் நெஞ்சை உறைய செய்துள்ளது.

Categories

Tech |