Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“என் மனைவியை மீட்டு தாங்க” காதல் திருமணம் செய்த வாலிபர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை மீட்டு தருமாறு கணவர் புகார் அளித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காட்டூர் காவல் நிலையத்தில் கட்டிட தொழிலாளியான சூர்யா(22) என்பவர் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூர்யா ஆசிரியர் காலணியில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இதற்கு கல்லூரி மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 22-ஆம் தேதி தர்மபுரியில் இருக்கும் கோவிலில் வைத்து சூர்யாவை திருமணம் செய்துள்ளார்.

பின்னர் கடந்த 28-ஆம் தேதி செமஸ்டர் தேர்வு எழுதுவதற்காக சூர்யா தனது மனைவியை கோவைக்கு அழைத்து வந்துள்ளார். இதனை அடுத்து காந்திபுரத்தில் இருவரும் நின்று கொண்டிருந்த போது திடீரென அங்கு வந்த கல்லூரி மாணவியின் உறவினர் ஒருவர் சூர்யாவை தாக்கியுள்ளார். பின்னர் கல்லூரி மாணவியை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றுள்ளார். எனவே எனது மனைவியை மீட்டு தர வேண்டும் என சூர்யா மனுவில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து காட்டூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |