தியாகி இமானுவேல் சேகரின் 65 ஆவது நினைவு தினம் கடந்த பதினோராம் தேதி அனுசரிக்கப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். மேலும் பாஜக சார்பில் மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி, மாநில துணை தலைவருமான சசிகலா புஷ்பா போன்ற பலரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது சசிகலா புஷ்பாவிற்கு பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சில காட்சிகள் இணையதளத்தில் வைரலானது.
மேலும் இதுகுறித்து பொன் பாலகணபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் சசிகலா புஷ்பாவின் கணவர் ராமசாமி, தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணனிடம் தன் மனைவியிடம் பொன் பால கணபதி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மின்னஞ்சல் மூலமாக புகார் கொடுத்துள்ளார். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது