ஆந்திர மாநிலம் பிரசாத் என்பவர் மனைவியுடன் விவாகரத்து ஆகி தன் இரண்டு மகள்களை வளர்த்து வந்துள்ளார்.அதில் மூத்த மகள் ஒரு இளைஞனை காதலித்து அவருடன் வீட்டை விட்டு சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த பிரசாத் 16 வயதான இளைய மகளை ஆண்களுடன் பேசக்கூடாது, மாலை 6 மணிக்கு மேல் வெளியே செல்லக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து கராராக வளர்த்து வந்துள்ளார்.
இருப்பினும் அந்த பெண் ஒருவரை காதலிப்பது தந்தை பிரசாத்துக்கு தெரிந்துவிடவே மகளை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து பேஸ்புக் லைவ் வந்த பிரசாத், என் தாயின் நினைவுநாளையொட்டி என் பேச்சை மீறிய மகளை கொன்றுவிட்டேன். அவரது சடலத்தை காட்டுகிறேன் என நேரலையில் காட்டியுள்ளார். இந்த வீடியோ வைரலாகவே போலீசார் பிரசாத்தை கைது செய்தனர்