Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

என் மகளை காணும்…. வாலிபரின் வெறிச்செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ  சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 13 வயது சிறுமி  ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்யும் முருகேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென வீட்டில் இருந்து வெளியேறி விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடினர். ஆனால் சிறுமி கிடைக்கவில்லை. இதுகுறித்து  சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முருகேஷ் சிறுமிடம்  திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் முருகேசை  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறுமியை மீட்டுள்ளனர்.

Categories

Tech |