Categories
சினிமா தமிழ் சினிமா

என் மகளை அடிச்சு கொன்னுட்டாங்க… சித்ராவின் தாயார்… பரபரப்பு புகார்…!!!

சின்னத்திரை நடிகை சித்ரா அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரின் தாயார் கூறியுள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை சித்ரா (28). இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர். இவரின் நடிப்பில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. அப்படிப்பட்ட இவர் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நேற்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சித்ராவின் தாயார் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “எனது மகளை அவரின் கணவர் அடித்து கொலை செய்திருக்கலாம். என் மகள் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு கூட இல்லை. அவள் மிகவும் தைரியமானவள்” என்று கூறியுள்ளார். சித்ரா தாயாரின் இந்த குற்றச்சாட்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இரண்டாவது நாளாக போலீசார் சித்ராவின் கணவர் ஹேம்நாத் மற்றும் ஹோட்டல் நிர்வாகிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |