Categories
அரசியல்

என் மகன் அரசியலுக்கு வந்து…. கஷ்டப்படுவதை நான் விரும்பவில்லை…. வைகோ பொளேர்…!!!

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்டமாக ஆறாம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் மக்கள் ஆர்வமுடன் தனது வாக்கினை அளித்தனர். இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கலிங்கப்பட்டியில் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கலந்துரையாடும் போது அவர்களில் ஒருவர், “கட்சியில் முக்கிய பொறுப்பு உங்களின் மகனுக்கு வழங்கப்படுமா?” என்ற கேள்வியை எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த வைகோ, “அரசியலுக்கு எனது மகன் வருவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனெனில் நான் கடந்த 6 வருடங்களாக அரசியலில் கஷ்டப்பட்டு இருக்கிறேன். மேலும் காரில் லட்சக்கணக்கான கிலோமீட்டர் 20 வருடங்களாக பயணம் செய்திருக்கிறேன். இதுபோல் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் நடைபயணமாகவும், நூற்றுக்கணக்கான போராட்டங்களும், 5 வருட சிறை என என் வாழ்க்கையை நான் சீரழித்து விட்டேன்.

இதனால் என் மகனும் அரசியலில் வந்து கஷ்டப்பட வேண்டாம். ஆகவே அரசியலுக்கு அவர் வருவதை நான் விரும்பவில்லை. இந்நிலையில் வருகிற 20-ஆம் தேதி கட்சியில் இருப்பவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தெரிய வரும். அப்பொழுது தான் மாவட்ட செயளாலர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் பெரும்பான்மையான முடிவு என்ன என்பது தெரியவரும்” என்று பதிலுரைத்தார்.

Categories

Tech |