உக்ரைனின் Zaporizhzhya பிராந்திய மாநில நிர்வாகத்தின் தலைவர் ஓலெக் புரியக்கின் மகன் விளாடிஸ்லாவ்-வை(16) ரஷ்யபடைகள் கடத்திவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
உக்ரைனில் ஆக்ரோஷமான தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யபடைகள் அந்நாட்டின் நிர்வாகத்தை சீர்குலைக்கும் அடிப்படையில் அவற்றின் முக்கியமான நகரங்களின் மேயர்கள் மற்றும் மாநில நிர்வாக தலைவர்களை கடத்தி வந்தது. இந்நிலையில் உக்ரைன் தென்கிழக்கு Zaporizhzhya பகுதியின் மாநில நிர்வாக தலைவர் ஓலெக் புரியக்கின் மகன் விளாடிஸ்லாவ்-வை(16) ரஷ்ய படைகள் கடத்திவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக ஓலெக் புரியக்கின் வெளியிட்டுள்ள தகவலில் “என் மகன் கடத்தப்பட்டு விட்டான்.
ரஷ்ய படைகள் அவனை கடத்தி விட்டனர். இப்போது அவன் எங்கு இருக்கிறான் என்று கூட எனக்கு தெரியவில்லை”என கூறியுள்ளார். அத்துடன் இது குறித்து தான் ஐரோப்பிய யூனியன் மற்றும் அனைத்து மனிதர்களையும் கேட்டுக்கொள்கிறேன் எனக்கு உதவுங்கள். உலகம் முழுவதும் தெரியட்டும் ரஷ்யர்கள், உக்ரைனிலுள்ள குழந்தைகளையும் கடத்துகிறார்கள் என்று என அவர் தெரிவித்துள்ளார். இதை அந்தப் பிராந்தியத்தின் மாநில ராணுவ துணைத்தலைவர் ஸ்லாடா நெக்ராசோவாவும் ( Zlata Nekrasova) உறுதிப்படுத்தியுள்ளார்.