Categories
சினிமா தமிழ் சினிமா

“என் ப்யூடிஃபுள் பிரேக்கப்”…. ஆங்கில படத்துக்கு இசை அமைக்கும் இளையராஜா…. இது வேற லெவல்ல போலயே….!!!!

இளையராஜா புதிதாக வர இருக்கும் ஆங்கில படம் ஒன்றிற்கு இசையமைக்க இருக்கிறார்.

இளையராஜா இந்திய திரைப்பட இசை அமைப்பாளர்களில் ஒருவர். இவர் தற்போது இளையராஜா இசையமைக்கும் 1,422 படம் இதுவாகும். இந்த படத்தை இங்கிலாந்தில் உள்ள பிரபல பட நிறுவனம் தயாரிக்கும் படத்துக்கு எ பியூட்டிஃபுல் பிரேக்கப் என பெயர் வைத்துள்ளனர். மேலும் இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தில் லண்டனில் இருந்து இந்தியாவிற்கு வரும் காதல் ஜோடிகள் இங்கு சில நாட்கள் சேர்ந்து வாழ்ந்து பிரிந்துவிட முடிவு எடுக்கின்றனர். ஆனால் அவர்கள் வசிக்கும் வீட்டில் பேய்களால் சில பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அவர்கள் சேர்ந்தே  இருந்தார்களா என்ற கதையம்சத்தில் தயாராகிறது. இந்த படத்தில் அஜீத் வாசன் உஜ்ஜினா இயக்குகிறார். கிரிஷ், மடில்டா ஆகியோர் நடிக்கின்றனர்.இது  திகில் படமாக தயாராக உள்ளது.

Categories

Tech |