கார்த்தி நடித்துள்ள விருமன் படத்தின் இசை வெளியீட்டுவிழா சில நாட்களுக்கு முன் மதுரையில் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய சூரி, அகரம் அறக்கட்டளை பற்றி கூறினார். அப்போது ஆயிரம் கோயில் கட்டுவதை விட, அன்ன சத்திரத்தை விட ஒரு மாணவனுக்கு கல்வி வழங்குவது சிறந்தது என பேசினார். அதற்கு சில இந்துஅமைப்புகள் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் விருமன் திரைப்படத்தின் சென்னை செய்தியாளர் சந்திப்பில் சூரி கூறியிருப்பதாவது, படக்குழுவினர் குறித்தும், நடிகை அதிதி செயல்பாடுகள் தொடர்பாகவும் நகைச்சுவையாக பேசினார்.
இதையடுத்து மதுரையில் தான் பேசிய பேச்சுக்கு விளக்கம் அளித்தார். அதாவது, நான் எப்போதும் மீனாட்சி அம்மனை குறிப்பிட்டு தான் பேசுவேன். எனக்கு மீனாட்சியம்மன் மிகவும் பிடிக்கும். நான் நடத்தி வரும் ஹோட்டல்களுக்கு அம்மன் என்று தான் பெயர் வைத்துள்ளேன். எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. நான் கோவிலுக்கு எதிரானவன் இல்லை. அதன் முக்கியத்துவமானது எனக்கு தெரியும் என அவர் பேசினார்.