கழுகு படத்தில் நடித்த கிருஷ்ணா மீது 10 லட்சம் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் கிருஷ்ணா அவர்கள் சென்னையில் உள்ள கோடம்பாக்கத்தில் டைரக்டர்ஸ் நகரில் வசிக்கிறார். நடிகர் கிருஷ்ணாவிடம் வேலை பார்த்த மேலாளர் திலீப் குமார் என்பவர் அசோக் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில் ” நடிகர் கிருஷ்ணா அவர்கள் அவரின் தேவைக்காக என்னிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் கடனாகக் வாங்கினார் .
ஆனால் இதுவரை கடனை திரும்பி தராமல் என்னை ஏமாற்றிவிட்டார். நடிகர் கிருஷ்ணா மீது நடவடிக்கை எடுத்து , அந்த பணத்தை எனக்கு வாங்கி கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார் “. இதனையடுத்து அசோக் நகரில் உள்ள குற்றப்பிரிவில் போலீசார் வழக்கு தொடுத்து விசாரணை செய்து வருகின்றனர்.