பணம் வாங்கி ஏமாற்றிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள டி.டி நகரில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவருக்கு தொழில் செய்வதற்காக 20லட்சம் ரூபாய் பணத்தை கடனாக கொடுத்துள்ளார். இந்நிலையில் சரவணன் தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.
ஆனால் கணேசன் பணத்தை திருப்ப கொடுக்காமல் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து சரவணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கணேசனை கைதுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.