Categories
அரசியல் மாநில செய்திகள்

“என் நாக்கு கருநாக்கு” எது சொன்னாலும் பலிக்கும்…. நாக்கை நீட்டி அதை சொன்ன அமைச்சர்…!!!

கருநாக்கு உள்ள தான் எது சொன்னாலும் பலிக்கும் என்று அமைச்சர் மஸ்தான் கூறியதால் விழுப்புரம் திமுக கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது. ” திமுகவை தேர்தல் களத்தில் விமர்சனம் செய்தவர்கள் ஜோசியம் பேசியவர்கள் ஸ்டாலின் எந்த காலகட்டத்திலும் முதல்வராக வர முடியாது. அவருடைய ஜாதகத்தில் அந்த அம்சமே இல்லை என்று திமுக மீது இருந்த காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இதில் அதிகமாக ஜோசியம் பார்த்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான்.

அவர் ஸ்டாலின் எந்த காலத்திலும் முதல்வராக வர முடியாது என்று சவால் விட்டார். ஆனால் ஜோதிடத்தை பொய்யாக்கி விதியை மதியால் வென்றார் ஸ்டாலின். ஸ்டாலின் CM ஆக மாட்டார் என்று பலரும் கூறியபோது, நான் அப்போதே ஸ்டாலின் CMஆக ஆவார் என்று கூறினேன். அதுபோல் இனி தமிழகத்தின் நிரந்தர CMஆக ஸ்டாலின்தான் இருப்பார், நம்பவில்லை என்றால் என் நாக்கை பாருங்கள், கருநாக்கு பலிக்கும்” என்று தெரிவித்தார்.

Categories

Tech |