Categories
மாநில செய்திகள்

என் தம்பி விஜயபாஸ்கர் இருக்க பயமேன்… புகழாரம் சூட்டிய தமிழிசை சௌந்தர்ராஜன்…!!!

தம்பி விஜயபாஸ்கர் இருக்க கொரோனாவுக்கு பயமேன் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புகழாரம் பேசியுள்ளார்.

தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், “அனைவரும் கூறுவார்கள் தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று, தம்பி விஜயபாஸ்கர் இருந்தால் கொரோனாவுக்கு அஞ்சேன். தெலுங்கானாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. அச்சமயத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தமிழகத்தில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என விஜயபாஸ்கர் கூறினார்.

அப்போது நான் தெலுங்கானா முதல் மந்திரியிடம் இதுபற்றி தமிழக சுகாதாரத்துறை விஜயபாஸ்கர் அவர்களிடம் கேட்டு சொல்கிறேன் என்று கூறினேன். பிரதமர் மோடி அதிகமாக பரிசோதனை செய்து கட்டுக்குள் வைத்துள்ளீர்கள் என்று பாராட்டை பெற்ற தமிழக சுகாதாரத்துறை பொறுப்பாக செயல்பட்டு வருகிறது. ஆன்மீக அரசியல் பற்றி விவாதித்து வருகின்ற நாம் அனைவரும் ஆன்மீக அறிவு மற்றும் அறிவியல் அறிய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |