Categories
சினிமா தமிழ் சினிமா

என் தந்தையின் ஆசை கடைசி வரை நிறைவேறவில்லை … உருக்கமாக பேசிய இயக்குனர் சிவா …!!

மறைந்த தன் தந்தையின் ஆசை நிறைவேறாமல் போனது குறித்து இயக்குனர் சிவா உருக்கமாக கூறியுள்ளார்.

தமிழ் திரையுலக பிரபல இயக்குனர் சிவா ‘சிறுத்தை’ திரைப்படம் மூலம் பிரபலமானவர் . இதையடுத்து நடிகர் அஜித்தை வைத்து வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். கடந்த 27ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக இயக்குனர் சிவாவின் தந்தை ஜெயக்குமார் காலமானார்.

இந்நிலையில் இயக்குனர் சிவா தன் தந்தை ஆசை நிறைவேறாமல் போனது பற்றி உருக்கமாக பேட்டி அளித்துள்ளார். அதில் என் தந்தை இழப்பால் மிகுந்த கவலையில் இருக்கிறேன். அவர் தன் துறையில் முப்பது வருடங்களாக வெற்றிகரமாக இருந்தார். அவர் பல்வேறு ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். என் தந்தையின் நீண்டநாள் ஆசை ஒரு கமர்ஷியல் படமாவது இயக்க வேண்டும் என்பது தான், ஆனால் நேரம் இல்லாததால் அவரது ஆசை கடைசிவரை நிறைவேறவில்லை என்றார்.

Categories

Tech |