Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

என் தங்கச்சி இப்படி பண்ணிட்டாளே… அண்ணன் எடுத்த விபரீத முடிவு… திண்டுக்கல்லில் சோக சம்பவம்..!!

மயிலாடுதுறையில் தங்கை இறந்த மன வருத்தத்தில் அண்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவிழந்தூரில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஷ் என்ற மகன் இருந்தார். இவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இவருடைய தங்கை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அதிலிருந்தே வெங்கடேஷ் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்துள்ளார். அவருக்கு அவரது உறவினர்களும், நண்பர்களும் ஆறுதல் கூறியுள்ளனர். இருப்பினும் வெங்கடேஷ் தங்கை இறந்த துக்கத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் வெங்கடேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்த அவரது தாய் தூக்கில் பிணமாக தொங்கிய மகனைக் கண்டு அதிர்ச்சியில் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மயிலாடுதுறை காவல்துறையினர் வெங்கடேஷின் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த தற்கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |